health-and-wellness

img

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா - சுகாதார ஆய்வாளர்கள் தகவல் 

ஜோஹன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவில்  கொரோனாவின் புதிய உருமாற்றத்தை அந்நாட்டுச் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கொரோனாவின் இந்த புதிய பரிணாம மாற்றத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

சி.2 என அழைக்கப்படும் கொரோனாவின் புதிய மாறுபாடு, கடந்த மே மாதத்தில் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது , பெரும்பாலான தென்னாப்பிரிக்கா மாகாணங்கள் மற்றும் ஆப்பிரிக்கா , ஐரோப்பா , ஆசியா மற்றும்  ஓசன்யாவில் உள்ள  பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த புதிய பரிணாம மாற்றத்தில் , வைரசின் உத்வேகம், நிலைப்பாடு , தன்மை குறித்து அறிவியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும், இந்த வைரஸ் உருமாற்றத்தை  கொரோனா தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தமுடியுமா என்பதையும் ,  அதனை எதிர்க்கத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  "ஆப் கன்சர்ன்" எனப்படும் பீட்டா வகை கொரோனாவையம் முதன் முதலில் கண்டுபிடித்த நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.  

;